தல அஜித்துடன் நடிகர் சிவ கார்த்திகேயன் நடித்த முதல் காட்சி, இது தான்..! எந்த படத்தில் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ.
தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர், இவருக்கு தமிழகம் முழுவதில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைபடங்கள் ரசிகர்களின் பேராதரவால் மாபெரும் வெற்றி பெற்றது.
மேலும் தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பின் போது தல அஜித் தனது பைக்கில் மற்ற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் சிவா கார்த்திகேயன் தல அஜித்துடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
ஆம், கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ஏகன் திரைப்படத்தில் தான் சிவா கார்த்திகேயன் தல அஜித்துடன் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.