குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் யார் தெரியுமா - ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சப்ரைஸ்
தமிழ் சின்னத்திரையில் தற்போது பெரிதும் கொண்டாடப்படும் நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோமாளி.
இதில் சீசன் 1 தொடர்ந்து சீசன் 2 மிகவும் வெற்றிகரமாக மக்களின் பேராதரவில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
கடந்த 2020 தீபாவளி அன்று துவங்கிய குக் வித் கோமாளி சீசன் 2, தற்போது பைனல் போட்டிக்கு வந்துள்ளது.
பைனல் போட்டியாளர்களாக பாபா பாஸ்கர், கனி, அஸ்வின் பவித்ரா, ஷகீலா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த பைனல் நிகழ்ச்சி வரும் தமிழ் புத்தாண்டு அன்று தொடர்ந்து 5 மணி நேரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. சமீபத்தில் தான், பைனல் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
அதன் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகின. மேலும் குக் வித் கோமாளி ரசிகர்கள் பலரும், சீசன் 2 வின் வெற்றியாளர் பாபா பாஸ்கர் தான் என்று கூறி வந்தனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2வின் பைனல் போட்டியில் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் கனி. இந்த தகவல் குக் வித் கோமாளி ரசிங்கர்களுக்கு சப்ரைஸ் அளித்துள்ளது.