பிரபல நடிகை சரிதாவின் தங்கை யார் தெரியுமா, அவரும் ஒரு நடிகை தானா... யார் தெரியுமா?
நடிகை சரிதா
நடிகை சரிதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து அசத்தியவர் நடிகை சரிதா.
150 படங்களுக்கும் மேல் நடித்தவர் 200 படங்களுக்கு மேல் மற்ற நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவர் தமிழக அரசு விருதுகள், கலைமாமணி விருது, கன்னட சினிமாவில் மாநில விருது என பல விருதுகளை வென்றிருக்கிறார்.

அவள் அப்படித்தான், பொண்ணு ஊருக்கு புதுசு, சக்களத்தி, நூல் வேலி, சுஜாதா என பல படங்கள் சரிதாவிற்கு வெற்றியை கொடுத்துள்ளது.
தொடர்ந்து படங்கள் நடித்தவர் 1988க்கும் பிறகு சினிமா பக்கம் வரவில்லை, 2001ம் ஆண்டு பிரண்ட்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பியவர் கடைசியாக 2023ம் ஆண்டு சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்தார்.

சகோதரி
பல மொழி சினிமாவில் படங்கள் நடித்து பிரபலமான சரதாவின் தங்கை யார் தெரியுமா, அவர் வேறு யாரும் இல்லை நடிகை விஜி சந்திரசேகர் தான்.
ரஜினியின் தில்லு முல்லு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஏராளமான படங்கள் நடித்து அசத்தியுள்ளார்.
