இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் யார் தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா?
பிரம்மானந்தம்
இன்று தென்னிந்திய திரையுலகில் ஜாம்பவானாக வலம் வரும் காமெடி நடிகர் குறித்து உங்களுக்கு தெரியுமா?
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலம் என்றாலும், தமிழ், கன்னடம் என கிட்டதட்ட 1000 படங்களுக்கும் மேல் தனது திரை வாழ்க்கையில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் தெரியுமா?
மேலும் 67 வயதாகும் இவர் 1987ல் தனது திரை பயணத்தை துவங்கினார். இருப்பினும், இன்று வரை பிசியாக வலம் வருகிறார். அவர் வேறுயாருமில்லை, நடிகர் பிரம்மானந்தம் தான்.
ஹைதராபாத்தில், வில்லாக்கள், ஆந்திராவில் விவசாய நிலங்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் என ரியல் எஸ்டேட்டில், அவர் செய்த புத்திசாலித்தனமான முதலீட்டால் தற்போது, இந்தியாவின் பணக்கார காமெடி நடிகராக வலம் வருகிறார்.
ஆடி, பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் உள்ளிட்ட உயரக சொகுசு கார்களை வைத்திருக்கிறார். அவரின் நிகர சொத்து மதிப்பு ரூ. 500 கோடி என்று கூறப்படுகிறது. கடந்த 2009ல் பிரம்மானந்ததுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.