திருமணம் ஆகி 2 வருடத்தில் உயிரிழந்த பாக்யராஜ் முதல் மனைவி யார் தெரியுமா?- இந்த படங்களில் அவர் நடித்துள்ளாரா?
கே.பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாக்யராஜ். இவர் நடிகை பூர்ணிமாவை மறுமணம் செய்திருந்தார்.
அவரது முதல் மனைவியின் பெயர் பிரவீணா. கே.பாலசந்தர் இயக்கிய மன்மத லீலை படத்தில் அறிமுகமானார்.
அப்படத்தை தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என நடிக்க தொடங்கியவருக்கு சின்ன வேடங்கள் கொண்ட படங்களாக அமைந்தது. 1980ல் பிரவீணா நடித்த படங்களில் ஜம்பு, பாமா ருக்மணி இரண்டும் முக்கியமானது.
ஜம்புவில் வழக்கம் போல் சின்ன வேடம், பாமா ருக்மணியில் முதன்முறையாக இரண்டாவது நாயகியாக அந்தஸ்து பெற்றார்.
நடிகையின் இறப்பு
பாமா ருக்மணி படத்தில் நடிக்கும் போது பாக்யராஜுடன் நட்பு ஏற்பட அப்படியே காதலாக மாறி 1981ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்கள்.
பின் 1983ம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் தனது 25வது வயதில் உயிரிழந்தார் பிரவீணா.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
