உண்மையில் மாஸ்டர் பட வசூலை முந்தியதா டாக்டர்! வெளியான புதிய தகவல்..
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்டர்.
இப்படம் வெளியானது முதல் பெரியளவில் ரசிகர்களிடம் ஆதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
மேலும் இப்படம் US பாக்ஸ் ஆஃபீஸில் மாஸ்டர் படத்தின் வசூல் சாதனை முறியடித்து, இந்த வருடம் அதிக வசூல் புரிந்த திரைப்படமாக இருந்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது டாக்டர் திரைப்படம் உண்மையில் மாஸ்டர் பட வசூலை முறியடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், மாஸ்டர் அங்கு 4,50,000 டாலர் வசூல் புரிந்துள்ளதாம். ஆனால் டாக்டர் 2,40,000 டாலர் வசூல் செய்துள்ளதாம். அதுமட்டுமின்றி டாக்டர் தான் US பாக்ஸ் ஆஃபீஸில் அதிக வசூல் செய்த சிவகார்த்திகேயன் திரைப்படமாக உள்ளது.