தமிழ்நாட்டு வசூலில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயனின் Doctor பட வசூல்- தெறிக்கவிடும் வசூல் விவரம்
சிவகார்த்திகேயன் தனது சினிமா பயணத்தில் படங்களை தேர்வு செய்வதில் மிகவும் தெளிவாக இருந்து வருகிறார். கலகலப்பாக ஒரு படம், சமூகத்துக்கு தேவையான கருத்தை கொடுக்கும் வகையில் ஒரு படம் என கதைகள் தேர்வு செய்கிறார்.
இப்போது அவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் Doctor. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் தயாராகி வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்திற்கு விமர்சனங்கள் எல்லாமே அமர்க்களமாக வந்தன.
அதற்கு ஏற்றார் போல் வசூலும் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை இப்படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாம்.
கொரோனா 2வது அலைக்கு பிறகு ஒரு படம் இவ்வளவு வசூல் என்றால் இதுதானாம்.
படத்தின் அமோக வெற்றியால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் எல்லாம் படு கொண்டாட்டத்தில் உள்ளனர்.