முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்த Doctor படக்குழுவினர்- சிவகார்த்திகேயன், அனிருத் எங்கே வந்துள்ளார்கள் பாருங்க
பல மாதங்களுக்கு பிறகு திரையரங்குகளில் இப்போது தான் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா நோய் தொற்று இப்போது குறைந்துள்ளதையடுத்து திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகி வருகிறது.
அப்படி இன்று வெளியாகி இருக்கிறது சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம்.
நெல்சன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் வருகின்றன. ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு டுவிட்டரில் தங்களது விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரசிகர்களுடன் படத்தை பார்க்க டாக்டர் படக்குழுவினர் வெற்றி திரையரங்கிற்கு வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை திரையரங்க உரிமையாளர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
#DoctorInVettri The whole crew was here for the FDFS !!! Movie was FUNN , dark comedy with lots of LOL moments. An all new avatar from @Siva_Kartikeyan bro & @anirudhofficial BGM is the spine of the film. A festive entertainment from @Nelsondilpkumar ?#DoctorFromToday #Vettri pic.twitter.com/E7soONndxY
— Rakesh Gowthaman (@VettriTheatres) October 9, 2021