டாக்டர் படத்தின் ஷூட்டிங்கை முடித்த இயக்குனர் நெல்சன், அடுத்தது தளபதி 65 தான்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் டாக்டர், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ட்ரெண்டானது.
மேலும் இதுவரை இப்படத்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக புகைப்படங்களுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் நடிகர் சிவகார்த்திகேயன், நெல்சன் மற்றும் படக்குழுவினர்களும் உள்ளனர், மேலும் இப்படத்தை முடித்துள்ள இயக்குனர் நெல்சன் அடுத்தது தளபதி 65 தானா என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#DoctorWrapUp????
— KJR Studios (@kjr_studios) January 3, 2021
Intha Corona la oru padatha eduthu mudikarthukulla naanga padra paadu irukkey... Ayyayyayyayyoo! It’s a wrap for #Doctor ???@Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl #Vinay @priyankaamohan @KVijayKartik pic.twitter.com/yxbbdVssOz