ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸை நெருங்கும் டாக்டர் படம்.. 3 வாரங்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து வெளியான திரைப்படம் டாக்டர்.
கடந்த அக்டோபர் 9-ம் தேதி வெளியாகி, இன்றுவரை சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் டாக்டர் படம் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீண்டு எழ செய்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை SK ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
படம் வெளியாகி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
9-ம் தேதி வெளியிடப்பட்ட டாக்டர் படம் இன்றுவரை கிட்டத்தட்ட 3 வாரங்களில் உலகம் முழுவது சுமார் ரூ. 96 கோடி வசூல் வேட்டை செய்திருக்கிறதாம்.
ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் டாக்டர் படத்தின் வசூல், படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.