டாக்டர் படத்தின் கதை இதுதானா..? டிரைலரில் காமித்தது பொய்யா?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் டாக்டர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வினை, பிரியா அருள் மோகன், அர்ச்சனா, தீபா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த டிரைலரில் சிவகார்த்திகேயன் ஒரு குரூப் அமைத்துக்கொண்டு குழந்தைகளின் உடலுறுப்புகளை திருடுவதுபோல் காமிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், அது உண்மை இல்லையாம், வில்லன் குரூப் அந்த குழந்தைகளை கடத்தி, உடலுறுப்புகளை திருடுவதற்கு முன், அந்த குழந்தைகளை கொண்டு சென்று பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைப்பதுதான், சிவகார்த்திகேயனின் நோக்கம் என்று தகவல் வெளியாகியுள்ளது.