டாக்டர் படம் சனிக்கிழமையில் வெளியாவது ஏன்..? காரணம் இதுதானா
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, தொகுப்பாளினி அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கடந்த வருடம் வெளியாகவிருந்த இப்படம் கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்த நிலையில், ஆக்டோபர் 9ஆம் தேதி ஆயுதபூஜைக்கு சில நாட்கள் முன்னரே, வெளியாகும் என அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில், பொதுவாக படங்களை வெள்ளிக்கிழமைகளில் தான், வெளியிடுவார்கள். ஆனால், 'டாக்டர்' படத்தை சனிக்கிழமை வெளியிட தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷின் சென்டிமென்ட் தான் காரணமாம்.
அவருக்கு 8ம் தேதி ஆகாதாம், 9ம் தேதிதான் ராசியாம். அதனால் தான், 9ம் தேதி படத்தின் ரிலீஸ் என கூறுகின்றனர்.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri