வண்டியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் - விஜய் படத்தை காண்பித்து சிகிச்சை செய்த டாக்டர்கள்
சசிவர்ஷன் என்ற 10 வயது சிறுவன் தனது மாமாவுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, தூக்கக்கலகத்தினால் பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளான்.
இதனால் சிறுவனுக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவனுக்கு பல இடங்களில் அடிபட்டதால் தையல் போட வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் சிறுவன் ஊசி வேண்டாம் என்று அடம் பிடித்துள்ளான்.
பின்னர் அருகிலிருந்த ஒருவர், சிறுவனிடம் உனக்கு என்ன மிகவும் பிடிக்கும் என்று கேட்க, விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளான் அந்த சிறுவன்.
அதையடுத்து அவர் தனது மொபைலில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை போட்டு காண்பித்துள்ளார். சிறுவனும் ஆர்வமாக படத்தை பார்த்த போது அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.