அமிதாப் பச்சனுக்கு எதிர்ப்பு தெரிவித்த குழந்தைகள் நல மருத்துவர்கள் - காரணம் பிஸ்கட்டா ?
பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அமிதாப் பச்சான். சமீபத்தில் இவர் தனியார் பிஸ்கட் விளம்பரத்தில் நடித்திருந்தார். அதில் அவர், தவறான தகவல்கள் கூறியதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.
டெல்லியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் என அனைவரும் அமிதாப் பச்சனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

கடிதம்
அந்த கடிதத்தில் " பிஸ்கட் சக்கரை, சோடியம், கொழுப்பு போன்றவற்றால் ஆனது. ஆனால் நீங்கள் விளம்பரத்தில் இந்த பிஸ்கட் கோதுமை பொருட்களில் ஆனது கூறியதன் மூலம் குழந்தைகளை தவறான வழியில் கொண்டு சென்றுவிடும்.
அதிக அளவில் குழந்தைகள் பிஸ்கட் உண்பதால் நீரழிவு மற்றும் உடம்பில் எதிர்ப்பு சத்தி குறைந்து விடும். இந்த விளம்பரம் குழந்தைகளையும், குடும்பங்களையும் பாதிக்கும் என்று அஞ்சுகிறோம்" என்று கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
இதற்கு அமிதாப் பச்சன் இடத்தில இருந்த எந்த தகவலும் வராத நிலையில் இந்த அமைப்பினர்கள் மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்ப உள்ளதாக கூறியுள்ளனர்.

துணிவு-விடம் தோற்றுப்போன வாரிசு.. முறியடிக்க முடியாத சாதனை, ஆனால்..