நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலகப்போகிறாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
திரிஷா
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருபவர் திரிஷா. முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

மேலும் மலையாளத்தில் ராம் என்கிற படமும், தெலுங்கில் விஸ்வம்பரா என்கிற படமும் திரிஷாவின் கைவசம் உள்ளன. அடுத்தடுத்து அந்த திரைப்படங்களும் வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விலகப்போகிறாரா திரிஷா
42 வயதில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா திடீரென சினிமாவிலிருந்து விலகப்போவதாக தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. நடிகை திரிஷா சினிமாவில் அறிமுகமானத்தில் இருந்து இதுவரை 75 படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக புது படங்கள் எதிலும் திரிஷா ஒப்பந்தமாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் சினிமாவிலிருந்து விலகப்போகிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.