பெங்களூருவில் தளபதி விஜய்க்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளதா? பலரும் பார்த்திராத வீடியோ பதிவு.
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
இப்படம் 50% இருக்கைகளுடன் வெளியானாலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய் பெங்களூருவில் உள்ள அவரின் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவரை சுற்றி உள்ள ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவே தளபதி விஜய் மைக்கில் அவர்களிடம் பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ.
#ThalapathyVijay in Bangalore!!#Master @actorvijay pic.twitter.com/tT8nHh2qqo
— Priyamudan Karthik (@KarthikMdr3) March 9, 2021