2 வார முடிவில் சென்னையில் மட்டும் சிவகார்த்திகேயனின் டான் படம் செய்த வசூல்- முழு விவரம்
சிபி சக்ரவர்த்தி தமிழ் சினிமாவில் பல படங்களில் உதவி இயக்குனராக நடித்திருப்பவர். இப்போது சிவகார்த்திகேயனை வைத்து டான் என்ற படத்தை இயக்கி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த மே 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. பாசம், கல்லூரி, கலாட்டா, காதல் என எல்லாம் கலந்த கலவையாக படம் அமைய படம் பார்த்தவர்கள் அனைவரும் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துவிட்டார்கள்.
மக்களின் ஆதரவோடு படம் 2 வாரங்களை தாண்டி 3வது வாரத்தில் வெற்றிகரமாக நுழைகிறது.

படத்தின் வசூல்
உலகம் முழுவதும் படம் ரூ. 100 கோடி வரை தாண்டி இப்போது ரூ. 104 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்திலும் படம் நல்ல வசூல் வேட்டை தான் நடத்துகிறது.
சென்னையில் 2 வார முடிவில் டான் திரைப்படம் ரூ. 6. 13 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா- லேட்டஸ்ட் க்ளிக். செம வைரல்