சிவகார்த்திகேயன் டான் படத்தின் தீடீர் ரிலீஸ் மாற்றம்.. காரணம் இதுதானா
சிவகார்த்திகேயனின் டான்
அட்லீயின் துணை இயக்குனராக பணிபுரிந்த, சிபி சக்ரவத்தியின் அறிமுக இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இது, இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படமாகும்.
கல்லூரி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, பாலசரவணன், மிர்ச்சி விஜய், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே இப்படத்திலிருந்து 'ஜலபுலஜங்' பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
ரிலீஸ் மாற்றம்
இந்நிலையில், இப்படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மே 20 திரைக்கு வருவதால், இப்படம் வருகிற மே 5ஆம் தேதியே வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.