டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கின்றாரா?
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
இதனிடையே அடுத்ததாக இவர் நடிப்பில் டாக்டர், அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளியாக உள்ளது, இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ’டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை சிபிசக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது
. இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது, அதில் சூரி பைக் ஓட்டுவது போன்றும் அவரின் பின்னால் சிவகார்த்திகேயன் பைக்கில் உட்கார்ந்து இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
மேலும் சிவகார்த்திகேயன் கழுத்தில் ஒரு கேமரா இருப்பதை அடுத்து அவர் இந்த படத்தில் ஒரு போட்டோகிராபர் அல்லது பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri