100 கோடியை நெருங்கும் சிவகார்த்திகேயனின் டான் ! உலகளவில் எவ்வளவு வசூல் தெரியுமா?
உலகளவில் வசூல் சாதனை படைக்கும் டான்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டான்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான டான் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தற்போது பாக்ஸ் ஆபீஸில் சக்கைபோடு போட்டு வருகிறது.
கடைசியாக வெளியான முன்னணி நடிகர்களை விட சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் தான் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் சாதனையை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
டான் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.48 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. மேலும் தற்போது இப்படத்தின் உலகளவிலான வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி டான் தற்போது வரை ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது, சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததை தொடர்ந்து டான் திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணையும் என்பதில் சந்தேகமே இல்லை.
மன்னிப்பு கேட்கவில்லை என்றால், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு - எச்சரிக்கை விடுத்த தனுஷ் !

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
