என்னை அப்படி சொல்லாதீங்க.. ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை பாதித்த நிலையில் முன்னாள் மனைவி ஆடியோ
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.
அவருக்கு Dehydration எனப்படும் நீரிழப்பு அறிகுறிகள் தெரிந்ததாகவும், வழக்கமான சோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது.

முன்னாள் மனைவி ஆடியோ
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாயிரா பானு இருவரும் கடந்த 29 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த வருடம் நவம்பரில் விவாகரத்தை அறிவித்தனர்.
தற்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உடல்நிலை மோசமாகி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன நிலையில் தற்போது சாயிரா பானு ஒரு ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்.
"மீடியாவில் என்னை ஏ.ஆர்.ரஹ்மானின் Ex Wife என எழுதுகிறார்கள். எங்களுக்கு இன்னும் சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை. நாங்கள் இன்னும் சட்டப்படி கணவன் மனைவி தான்" என கூறி இருக்கிறார் சாயிரா பானு.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri