இதற்காக தான் கொடைக்கானல் போகிறேன்.. யாரும் பின்னால் வராதீங்க: நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது அரசியல் மற்றும் சினிமா என மாறி மாறி பணிகளை கவனித்து வருகிறார். சமீபத்தில் கோவைக்கு அவர் சென்றபோது அவரை பார்க்க பெரிய அளவில் ரசிகர் கூட்டம் திரண்டு இருந்தது. மேலும் அவர் ரோட்டில் செல்லும்போது அவர் வண்டி மீது ஏறுவது போன்ற விஷயங்களையும் செய்து இருந்தனர்.
விஜய் காரில் ஏறி சென்றபோது அவரது காரை பல ரசிகர்கள் வேகமாக பைக்கில் பின்தொடர்ந்து சென்றனர். அபோது சிலர் தடுமாறி விழுந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது.
கொடைக்கானல் போகிறேன்
இந்நிலையில் இன்று விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரைக்கு சென்றார். ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் இன்று ஜனநாயகன் பட வேலைக்காக தான் போகிறேன். கொடைக்கானலில் ஷூட்டிங்கிற்காக செல்கிறேன். '
'வேறொரு தருணத்தில் கட்சி சார்பாக நான் மதுரையில் உங்களை சந்தித்து பேசுகிறேன். இன்று நான் விமானத்தில் இருந்து இறங்கி உங்களை பார்த்துவிட்டு வேலையை பார்க்க கிளம்புகிறேன். நீங்களும் பத்திரமாக கிளம்பி செல்லுங்கள்.'
'யாரும் என காருக்கு பின்னால் வர வேண்டாம். நின்றுகொண்டு பைக் ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுவது போன்ற விஷயங்களை செய்யாதீங்க. அந்த காட்சியை எல்லாம் பார்க்கும்போதே மனதுக்கு பதற்றமாக இருக்கு. கூடிய விரைவில் வேறொரு சந்தர்ப்பத்தில் நான் உங்களை சந்தித்து பேசுகிறேன்' என விஜய் கூறி இருக்கிறார்.