சம்பளமே வேண்டாம், நடிக்க வருகிறேன்! ஆனால்.. பஹத் பாசில் சொன்னதை கேட்டு ரஜினி ஷாக்
ஜெய்பீம் பட புகழ் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்து இருக்கும் படம் வேட்டையன். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், அபிராமி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர்.
நேற்று இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய ரஜினி 'மெசேஜ் சொல்லும் கதை எல்லாம் எனக்கு வேண்டாம், கமர்ஷியலாக தான் இருக்க வேண்டும்' என ஆரம்பத்திலேயே ஞானவேலிடம் கூறிவிட்டதாக தெரிவித்தார்.

பஹத் பாசில்
கதை உறுதியாகி, ஷூட்டிங் போகலாம் என பார்த்த நேரத்தில் சில சிக்கல்கள் வந்திருக்கிறது. ஒரு முக்கிய ரோலில் பஹத் பாசில் தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் உறுதியாக இருந்தாராம்.
சம்பளம் கூட வேண்டாம், நடிக்க வருகிறேன் என அவர் கூறினார். ஆனால் அவரது தேதிகள் தற்போது "இல்லை. அவருக்காக காத்திருக்கலாம்" என ஞானவேல் ரஜினியிடம் கூறினாராம். அதை கேட்டு ஷாக் ஆன ரஜினி, அதை லைகா நிறுவனத்திடம் தான் கேட்க வேண்டும் என சொல்லிவிட்டாராம்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri