சிக்ஸ் பேக் யாரும் முயற்சி பண்ணாதீங்க.. பாதிப்பு பற்றி நடிகர் பரத் சொன்ன அதிர்ச்சி தகவல்
நடிகர் பரத் தமிழ் சினிமாவில் 2003ல் பாய்ஸ் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அதன் பிறகு ஏராளமான படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் தான் சிக்ஸ் பேக் வைத்ததால் பட்ட கஷ்டம் பற்றி பேசி இருக்கிறார்.

யாரும் முயற்சி கூட பண்ணாதீங்க
சிக்ஸ் பேக் என்பதை யாரும் வைக்க முயற்சி கூட பண்ணாதீங்க. அது healthy கிடையாது. உள்ளே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக தியாகங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் இருக்கும்.
வெளியில் பார்க்கும்போது, சிக்ஸ் பேக் என்பது போட்டோவுக்கு மட்டும் நன்றாக இருக்கும். ஆனால் அதற்காக இருக்கும் உழைப்பு மிகமிக பெரியது.
இப்போது இருக்கும் பசங்க அப்படி சிக்ஸ் பேக் முயற்சிக்க வேண்டும் என்றால் ஒரு முறை முயற்சி செஞ்சிட்டு விட்டுடுங்க. அதையே maintain பண்றது உடலுக்கு நல்லது கிடையாது.
555 படம் பண்ணும்போது நான் வெறும் ** பிஸ்கெட், சிக்கன், முட்டை, காய்ந்த திராட்சை.. இதை மட்டுமே ஒன்றரை வருடம் சாப்பிட்டு வாழ்ந்தேன். அப்போது என் உடலில் இருந்த fat வெறும் 11 தான்.
இவ்வாறு பரத் கூறி இருக்கிறார்.
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri