விடாமுயற்சி படம் எப்படி வந்திருக்கு தெரியுமா.. முக்கிய நட்சத்திரம் கூறிய தகவல்

Kathick
in திரைப்படம்Report this article
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜித்தின் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கும் படம் தான் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் தான் இப்படத்தின் அசர்பைஜான் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. அடுத்ததாக ஹைதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
முதலில் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த நிலையில், திடீரென அவர் வெளியேற அவருக்கு பதிலாக இப்படத்தில் இணைந்தார் ஓம் பிரகாஷ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விடாமுயற்சி படம் குறித்து பேசினார்.
படம் எப்படி வந்திருக்கு
இதில் படம் எப்படி வந்திருக்கு சார் என தொகுப்பாளர் கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், "படம் சூப்பரா வந்துருக்கு, விடாமுயற்சி படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும்படியாக இப்படத்தை மகிழ் திருமேனி எடுத்துள்ளார். பேமிலி, ட்ராமா, செண்டிமெண்ட், ஆக்ஷன் என படத்திற்குள் அனைத்து ஜானர்களும் இருக்கிறது" என கூறியுள்ளார்.