குக் வித் கோமாளி 3: போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த நடுவர்கள் அறிவிப்பு
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அம்மு அபிராமி, வித்யூலேகா, ரோஷ்ணி, ஸ்ருத்திகா, கிரேஸ் ஆகியோருடன் சமீபத்தில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த சுட்டி அரவிந்த் மற்றும் வேட்டை முத்துக்குமார் அகியோர் ஷோவில் இருக்கின்றனர்.
கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் யாரும் சரியாக செய்யவில்லை என நடுவர்கள் போட்டியாளர்களை எச்சரித்தனர். மேலும் யாருக்குமே band தரப்படவில்லை. இந்த வாரமும் மீண்டும் அதே bandக்கான டாஸ்குகள் நடைபெற இருக்கிறது.
டபுள் எலிமினேஷன்
இந்நிலையில் இன்றைய எபிசோடு தொடங்கிய உடனேயே போட்டியாளர்களுக்கு நடுவர்கள் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை கொடுத்தனர்.
இந்த முறை டபுள் எலிமினேஷன் இருக்கும் என செக் வெங்கடேஷ் பட் அறிவித்ததும்போட்டியாளர்கள் ஷாக் ஆனார்கள்.
தளபதி விஜய்யின் பீஸ்ட் வெற்றியா? தோல்வியா? உண்மையை முதல் முறையாக கூறிய உதயநிதி ஸ்டாலின்