டபுள் எலிமினேஷன் அறிவித்த பிக் பாஸ்! பாலாஜி செயலால் கொந்தளித்த வனிதா
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தற்போது மூன்றாவது வாரத்தில் இருக்கிறது. இந்த ஷோ 24 மணி நேரம் ஒளிபரப்பாகி வந்தாலும் சுவாரஸ்யம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்கிற விமர்சனம் தான் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட காலேஜ் டாஸ்கில் போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என சொல்லி பிக் பாஸ் ஒரு ஷாக்கிங் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என அறிவித்து இருக்கிறார்.
அதன் பின் பாலாஜி முருகதாஸ் வந்து 'ஒரு போட்டியாளரரை நாமே பேசி முடிவெடுத்து எலிமினேட் செய்யலாம்' என கூறுகிறார். அப்போது பலரும் பல பெயர்களை கூறுகின்றனர். அனைவரும் சீரியஸாக பேசி கொண்டிருக்கும்போது அது பிரான்க் என பாலாஜி முருகதாஸ் சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர்.
வனிதா அதற்காக பாலாஜியிடம் மிக கடுமையாக கத்தி சண்டை போட்டிருக்கிறார். அவர் கேப்டன் என்பதால் தன்னிடம் ஏன் சொல்லவில்லை என கேட்கிறார். ஆனால் பாலாஜி வழக்கம்போல கூலாக 'இது என் கேம்' என சொல்லி பதிலடி கொடுக்கிறார்.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day18 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/wVLcBaKXsT
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 17, 2022
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day18 #Promo2 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/rza6fpIQ9L
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 17, 2022