Dr.A.C சண்முகம் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் ரஷ்யா
பிரபல பல்கலைகழகத்தின் நிறுவனர்-வேந்தர் Dr.A.C சண்முகம் அவர்கள் ரஷ்ய நாட்டில் உள்ள Kurusk மாநில ஆளுநர் அழைப்பின் பேரில் வருகின்ற பிப்ரவரி மாதம் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை ரஷ்ய நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அச்சமயம் Kurusk மாநில சட்டசபையிலும் சிறப்புரை ஆற்ற அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இதை தொடர்ந்து இந்த மாநிலத்தில் 88 ஆண்டு பழமைவாய்ந்த Kursk மாநில மருத்துவ பல்கலைகழகத்தின் 88வது ஆண்டு விழாவில், நிறுவனர்-வேந்தர் Dr.A.C சண்முகம் ஆற்றுகின்ற கல்விசார்ந்த பணிகளை முன்னிட்டும், மருத்துவம் சார்ந்த பொதுப் பணியில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த மக்களுக்கு எங்கள் மருத்துவ கல்லூரிகளின் மூலம் கட்டணமில்லா மருத்துவம் அளித்தமையை பாராட்டியும், பல நாடுகளின் நற்மதிப்பையும், இங்கிலாந்து நாட்டிலுள்ள 400 ஆண்டு பழமைவாய்ந்த ராயல் காலேஜ் ஆப் பிசிஷியன்ஸ் மற்றும் சர்ஜன்கள் (FRCPS) கௌரவ பட்டத்தை பெற்றமைக்கும் இந்த மாநில பல்கலைகழகம் நிறுவனர்-வேந்தரை சிறப்பிக்கின்ற வகையில் அவர்களது 88ம் ஆண்டு விழாவிற்கு தலைமையேற்க அழைத்துள்ளார்கள்.
அவ்வமயம் இந்த பல்கலைகழகத்தின் முதன்மை கல்வியாளர் (Rector) Dr.VIKTOR ANARTOLYEVICH LAZARENKO அவர்களின் 35 ஆண்டு மருத்துவ துறையில் அவர் புரிந்துள்ள பல சேவைகளையும், சாதனைகளையும் கருத்தில் கொண்டு டாக்டர்.எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைகழகத்தின் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்க உள்ளார்களாம்.
மதிப்பிற்குரிய பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் தலைமையில் அமைந்துள்ள மைய அரசு நமது நாடு கல்வி
துறையில் மேலும் பல முன்னேற்றங்களை காணுகின்ற வகையில் அண்மையில் பல திட்டங்களை அறிவித்துள்ளனர்.
நமது நாட்டின் பல்கலைகழகங்கள் வெளிநாட்டு பல்கலைகழகங்களோடு ஒப்பிடும் வகையில் திகழவும், வழி
முறைகளை அறிவித்துள்ளனர்.
இந்த ரஷ்ய பயணத்தில் மதிப்பிற்குரிய பாரத பிரதமர் அவர்களின் கல்வி கொள்கைகளின் அடிப்படையில் Kursk மாநில மருத்துவ பல்கலைகழகத்துடன் டாக்டர்.எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - நிகர்நிலை பல்கலைகழகமும் கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த திட்டங்களுக்கான சில புரிதல் ஒப்பந்தங்களையும் பரிமாற்றிக் கொள்ள திட்டமிள்ளனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
