டிராகன் பட புகழ் கயாடு லோஹர் பிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?
கயாடு லோஹர்
கடந்த 2021ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான முகில்பேட்டை என்ற கன்னட படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கயாடு லோஹர்.
2022ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அல்லூரி என்ற படத்தில் நடித்தார்.
பின் மராத்தி, மலையாளம் என நடித்து வந்தவர் தமிழில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக டிராகன் படத்தில் நடித்ததன் மூலம் ஒரே படத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வருகிறார்.
தற்போது இவர் இதயம் முரளி படத்தில் நடித்து வருபவர் தெலுங்கிலும் படம் கமிட்டாகி நடிக்கிறார்.
டயட் டிப்ஸ்
அதிகாலை எழுந்ததும் குறைந்தபட்சம் ஒருமணி நேரம் யோகா செய்வேன், அதன்பின் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அரைமணி நேரம், நடைப்பயிற்சி அரைமணி நேரம்.
எனது தினசரி பயிற்சி என்றால் ஸ்டெமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள், புஷ்-அப், புல்-அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகள் தான்.
நடனம் பயிற்சிகளுக்கும் தினசரி ஒரு மணி நேரமாவது ஒதுக்குவேன், இது தவிர ஓய்வு நேரங்களில் டிரக்கிங், டிராவலிங் மிகவும் பிடித்தமானவை என கூறியுள்ளார்.