மாஸ் ஹிட் கொடுத்த டிராகன் படம்.. 1 வருட திரைப்பயணத்தை 1 நிமிட வீடியோவாக வெளியிட்ட இயக்குநர்
டிராகன்
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் 2025ல் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்துள்ளது. லவ் டுடே என்ற தனது அறிமுக திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக மாறினார் பிரதீப் ரங்கநாதன்.
இதை தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்துள்ள இரண்டாவது திரைப்படம் டிராகன் 10 நாட்களிலே ரூ. 100 கோடியை கடந்து சாதனை படைத்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில், பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அதை தொடர்ந்து, கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நடிகை கயாடு லோகர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 நிமிட வீடியோ
இந்நிலையில், டிராகன் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அவரது டிராகன் திரைப்பட 1 வருட பயணத்தை 1 நிமிட வீடியோவாக தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,
1 year journey as Dragon Director in 1 minute ! ❤️🔥
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) March 28, 2025
Thank you 🤗@pradeeponelife @archanakalpathi @aishkalpathi @Ags_production ♥️#Dragon pic.twitter.com/B03kRc2WRk