15 நாட்களில் டிராகன் நடத்திய வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
டிராகன்
தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நடிகர்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டிராகன். இப்படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வன், காயடு லோஹர், மிஸ்கின், கவுதம் மேனன், விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் நடித்திருந்தனர்.
மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இப்படம் மாபெரும் அளவு லெவெற்றியடைந்துள்ளது. ரூ. 37 கோடி பட்ஜெட்ல எடுக்கப்பட்ட இப்படம் 10 நாட்களிலேயே ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது.
வசூல் விவரம்
இந்த நிலையில் 15 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள டிராகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 15 நாட்களில் ரூ. 130 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. விரைவில் ரூ. 150 கோடி பாக்ஸ் ஆபிஸை அடைகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.
You May Like This Video

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
