2 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
டிராகன்
பிரதீப் ரங்கநாதன் - அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி கடந்த 21ம் தேதி வெளிவந்த திரைப்படம் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர்கள் மிஸ்கின் மற்றும் கவுதம் மேனன் நடித்திருந்தார்கள்.
youtube சென்சேஷன் விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வரும் டிராகன் திரைப்படம் இரண்டு நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், இரண்டு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம், ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
