9 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள மாபெரும் வசூல்.. எவ்வளவு தெரியுமா
டிராகன்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான டிராகன் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தார். ரூ. 37 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து அனுபமா மற்றும் கயாடு லோஹர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
மேலும் மிஸ்கின், கவுதம் மேனன், விஜே சித்து, ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அமோக வரவேற்பை மக்களிடையே பெற்ற இப்படம் முதல் நாளில் இருந்த வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
இந்த நிலையில், டிராகன் திரைப்படம் 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 94 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
