ரிலீஸ் முன்பே அட்வான்ஸ் புக்கிங் மூலம் பிரதீப்பின் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா?
டிராகன் படம்
லவ் டுடே படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கியவர் பிரதீப் ரங்கநாதன்.
அப்படம் கொடுத்த வரவேற்பு அவருக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அப்படி அவர் ஹீரோவாக தற்போது நடித்துள்ள படம் டிராகன், ஓ மை கடவுளே என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து தான் இயக்கியுள்ளார்.
இதில் பிரதீப்பிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சினேகா, மிஷ்கின், விஜே சித்து என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
கலெக்ஷன்
இன்று செம மாஸாக படம் வெளியாகியுள்ளது, படத்தை ஸ்பெஷலாக பார்த்த நடிகர் சிம்பு படத்திற்கு பிளாக்பஸ்டர் என விமர்சனம் கொடுத்துள்ளார்.
இப்படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் மாஸாக நடந்துள்ளதாம், இந்தியளவில் படம் ரூ. 3.35 கோடியும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 2.11 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.