விடாமுயற்சி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த டிராகன்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
டிராகன்
சமீபத்தில் வெளிவந்து வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிற டிராகன் திரைப்படம் விடாமுயற்சி படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வந்த நிலையில், மக்கள் அமோக வரவேற்பை கொடுத்துள்ளனர்.
படிப்பு முக்கியம் என இப்படம் பேசியது. மேலும் யதார்த்தம் என்ன என்பது குறித்து தெளிவாக இப்படத்தில் நாம் ரசிக்கும்படி காட்டியிருந்தார் இயக்குநர் அஸ்வத். உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 94 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
வசூல் சாதனை
இந்த நிலையில், வட அமெரிக்காவில் மட்டுமே $950K+ வசூல் செய்துள்ளது. இதன்மூலம் வட அமெரிக்காவில் மட்டும் விடாமுயற்சி படத்தின் வசூல் சாதனையை டிராகன் முறியடித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போர் நிறுத்தம்... பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர் அறிவிப்பு News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri
