பல கோடி லாபம் கொடுத்த டிராகன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க
டிராகன்
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் 2025ல் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
லவ் டுடே படத்தின் மூலம் தனது அறிமுக திரைப்படத்திலேயே ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக மாறினார் பிரதீப் ரங்கநாதன். இதை தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்துள்ள இரண்டாவது திரைப்படம் டிராகன் 10 நாட்களில் ரூ. 100 கோடியை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸ்
இதன்மூலம் முதல் இரண்டு திரைப்படங்களில் தொடர்ந்து ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸை தொட்ட ஒரே ஹீரோ இவர் தான். இந்த நிலையில், பல வாரங்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் டிராகன் திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு பல கோடிகள் லாபம் கிடைத்துள்ளது என சொல்லப்படுகிறது.

ஒரு வழியாக கனவை நினவாக்கிய கணவர்- 100 கோடி செலவில் இவ்வளவு பிரமாண்டமா? திகைப்பில் ரசிகர்கள் Manithan

ஊழியர்கள், வீட்டு உதவியாளர்கள்... பல கோடி மதிப்புள்ள பங்குகளை அள்ளிக்கொடுத்த தொழிலதிபர் News Lankasri
