வசூலில் மாஸ் காட்டிய பிரதீப்பின் டிராகன் பட OTT ரிலீஸ் எப்போது? வெளிவந்த தகவல்
டிராகன் படம்
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக களமிறங்கி இப்போது வெற்றி நாயகனாகவும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன்.
லவ் டுடே படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தனது முதல் படத்திலேயே ரூ. 100 கோடி வசூலை குவித்தார். முதல் படமே வெற்றியை கொடுத்த அதன்பின் அவர் நடிக்க கமிட்டான படம் டிராகன்.
ஓடிடி ரிலீஸ்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபமா, விஜே சித்து, ஹர்ஷத் கான், மிஷ்கின், ஜார்ஜ் மரியான், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடிக்க இப்படம் கடந்த பிப்ரவரி 21ம் தேத ரிலீஸ் ஆகி இருந்தது.
விமர்சனம், வசூல் இரண்டிலுமே பட்டய கிளப்பிய இப்படம் உலகளவில் ரூ. 150 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வரும் மார்ச் 21ம் தேதி டிராகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம்.

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri
