மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன்.. இதுவரை இத்தனை கோடி வசூலா
2025ம் ஆண்டு துவக்கமே தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல நல்ல படங்கள் வெளிவந்து வெற்றியடைந்துள்ளது.
மதகஜராஜா, விடாமுயற்சி, குடும்பஸ்தன், டிராகன், வணங்கான் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

டிராகன்
இதில் விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து டிராகன் படமும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிட்டிருந்தனர்.

அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கவுதம் மேனன், மிஸ்கின் விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
வசூல்
மக்களிடையே பேராதரவை பெற்ற டிராகன் படம் மூன்று வாரங்கள் பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 138 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri