ரூ 50 கோடி வசூலை அள்ளிய படத்திற்கு தடையா? ஸ்ட்ரிக்ட் கண்டிசன் போட்ட முக்கிய அமைப்பு! என்ன சொன்னார்கள் தெரியுமா?
தமிழில் கமல் ஹாசன், கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தை நாம் மறந்திருக்க மாட்டோம் தானே. இன்னும் அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மனதில் பலருக்கும் மனதில் இருக்கும்.
நல்ல கதை கொண்ட இப்படம் மலையாளத்தில் மோகன் லால், மீனா நடித்த திரிஷ்யம் படத்தின் ரீமேக். 2013 ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்று ரூ 50 கோடிவசூலை அள்ளியது. ஜீத்து ஜோசப் இயத்தில் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை மறுநாள் ஃபிப்ரவரி 19 ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தியேட்டரிலும் திரிஷ்யம் 2 படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்த நிலையில், ஹீரோ மோகன் லாலும் ஓடிடி ரிலீஸ்க்கு பின் தியேட்டரிலும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறியிருந்தார்.
ஆனால் திரிஷ்யம் 2 படத்தை தியேட்டரில் வெளியிட அனுமதிக்க மாட்டோம். ஓடிடியில் வெளியான எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிட கேர ஃபிலிம் சேம்பர் அனுமதிக்காது.
இந்த விதி மோகன் லாலுக்காகவோ ஒரு புது முகத்துக்காகவோ மாற்றப்படாது என சேம்பர் தலைவர் விஜயகுமார் கூறியுள்ளார்.