7 நாட்களில் த்ரிஷ்யம் 3 செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
த்ரிஷ்யம் 3
கடந்த வாரம் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 3 திரைப்படம் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

மலையாள சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் த்ரிஷ்யம். இப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. இதை தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு த்ரிஷ்யம் 2 திரைப்படம் வெளிவந்த நிலையில், இப்படத்திற்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பை தந்தனர்.
இரண்டு பாகங்களும் வெற்றிபெற்ற நிலையில், த்ரிஷ்யம் 3 எப்போது என தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் கூட்டணியில் த்ரிஷ்யம் 3 உருவாகி கடந்த மே 21ஆம் தேதி திரைக்கு வந்தது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
இந்த நிலையில், 7 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் த்ரிஷ்யம் 3 உலகளவில் இதுவரை ரூ. 181 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாரத்தில் ரூ. 181 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இப்படம் இனி வரும் நாட்களிலும் வசூலில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
