திரிஷ்யம் 3 திரைப்படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் திரிஷ்யம் 3.

இப்படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்க, மீனா, எஸ்தர் அனில், அன்ஷிபா, ஆஷா சரத் ஆகியோர் நடித்திருந்தனர்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன்
இதற்கு முன் வெளிவந்த திரிஷ்யம் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், திரிஷ்யம் 3 படமும் பிளாக்பஸ்டர் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
வசூல்
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை திரிஷ்யம் 3 முழுமையாக பூர்த்தி செய்யவில்லை; மாறாக கலவையான விமர்சனங்களை பெற்றது.

இருப்பினும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரிஷ்யம் 3 இதுவரை உலகளவில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.