த்ரிஷ்யம் 3 உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்
த்ரிஷ்யம் 3
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் த்ரிஷ்யம் 3.
இதற்கு முன் வெளிவந்த த்ரிஷ்யம் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இதனால் த்ரிஷ்யம் 3 திரைப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை ஒரு பக்கம் சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பியது.
வசூல்
இந்த நிலையில், 6 நாட்களில் த்ரிஷ்யம் 3 திரைப்படம் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 6 நாட்களில் உலகளவில் ரூ. 165 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu