போஸ்டர் மட்டும் வெளியாகி பாதியிலே கைவிடப்பட்ட தனுஷின் முக்கிய திரைப்படங்கள் ! இத்தனையா?
தனுஷ்
இன்று ஹாலிவுட் வரை சென்று இந்திய திரையுலகமே கொண்டும் ஒரு முக்கிய நடிகராகி இருப்பவர் தனுஷ்.
ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் தனுஷ் நடித்துள்ள தி கிரே மேன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அப்படத்தில் அவரின் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனுஷிற்கு திரையுலகை பல முக்கிய நட்சத்திரங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று வாத்தி திரைப்படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் போஸ்டர் எல்லாம் வெளியாகி பாதியிலே கைவிடப்பட்ட தனுஷின் முக்கிய திரைப்படங்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.
தேசிய நெடுஞ்சாலை
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் முதலில் வெளியாக இருக்க வேண்டிய திரைப்படம் தேசிய நெடுஞ்சாலை. ஆனால் இப்படம் கைவிடப்பட்டு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லதாவன் திரைப்படம் வெளியானது. பின் இந்த கதையே வெற்றிமாறன் உதவி இயக்குநர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் NH4 திரைப்படம் வெளியானது.
திருடன் போலீஸ்
பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் திருடன் போலீஸ். போட்டோ ஷூட் மற்றும் அறிவிப்புடன் இப்படம் பாதியிலே கைவிடப்பட்டது.
இது மாலை நேரத்து மயக்கம்
இயக்குநர் செல்வராகவன் தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது, பின் சில காரணங்களால் இப்படம் பாதியிலே கைவிடப்பட்டது. மேலும் இரண்டாம் உலகம் திரைப்படத்தின் பல காட்சிகள் இப்படத்தில் இருந்து மாற்றப்பட்டது தான் சொல்லப்படுகிறது.
சூதாடி
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், பார்த்திபன், நடிகை மீனாட்சி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவிருக்க வேண்டிய திரைப்படம் சூதாடி. இப்படம் 5 நாள் ஷூட்டிங் உடன் பாதியிலே கைவிடப்பட்டுள்ளது.
டாக்டர்ஸ்
தனுஷ், சொனிய அகர்வால் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் டாக்டர்ஸ் திரைப்படம் உருவாக இருக்கிறது போஸ்டருடன் இப்படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்பட சில காரணங்களால் திடீரென கைவிடப்பட்டுள்ளது.
ரஜினிக்கே மிகவும் பிடித்த விளையாட்டு

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
