ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய டப்பிங் சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாகிறது... எந்த தொலைக்காட்சி, எப்போது?
டப்பிங் சீரியல்கள்
தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழிலேயே நிறைய தொடர்கள் உருவாகியிருக்கிறது, மற்ற மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி இருக்கிறது.
அப்படி ஒளிபரப்பான தொடர்களை தாண்டி நிறைய மற்ற மொழி சீரியல்கள் டப் செய்யப்பட்டு தமிழிலும் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.
சீரியல்கள்
தற்போது ரீமேக் சீரியல்களை ரசித்த ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.
அதாவது பாலிமர் தொலைக்காட்சியில் எப்போதும் டப்பிங் சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பாகும், ஆனால் இப்போது அவ்வளவாக தொடர்கள் ஒளிபரப்பாவது இல்லை.
இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டான டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதாம். உள்ளம் கொள்ளை போகுதடா, இனி எல்லாம் வசந்தமே போன்ற டப்பிங் தொடர்கள் மீண்டும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
இரவு 9 மணிக்கு உள்ளம் கொள்ளை போகுதடாவும், இரவு 9.30 மணிக்கு இனி எல்லாம் வசந்தமே தொடரும் வரும் நவம்பர் 18ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
