Dude 8 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. மாபெரும் சாதனை படைத்த பிரதீப் ரங்கநாதன்..
பிரதீப் ரங்கநாதன்
லவ் டுடே படத்தின் மூலம், அறிமுக படத்திலேயே ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகன் என்கிற சாதனையை படைத்தார் பிரதீப் ரங்கநாதன்.

இதை தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த டிராகன் படம் மக்களின் பேராதரவோடு உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இரண்டு திரைப்படங்கள் தொடர்ந்து ரூ. 100 கோடி வசூல் ஈட்டியது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

மாபெரும் சாதனை
இந்த நிலையில், Dude படம் வெளிவந்தது. இப்படம் கலவையான விமர்சனங்கள், மறுபக்கம் சர்ச்சையில் சிக்கினாலும் இளைஞர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றியடைந்துள்ளது.

மேலும் இப்படமும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம், முதல் மூன்று படங்களும் ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகன் என்கிற மாபெரும் சாதனையை இந்திய சினிமாவில் படைத்துள்ளார் பிரதீப்.