Dude படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?
லவ் டுடே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே ரூ. 100 கோடி வசூல் நாயகனாக மாறினார் பிரதீப் ரங்கநாதன். இதை தொடர்ந்து இவர் நடித்த டிராகன் படமும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
Dude
தமிழ் சினிமாவில் 2025ஆம் ஆண்டு டாப் 10 திரைப்படங்களில் இப்படமும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிராகன் வெற்றிக்குப் பின் பிரதீப் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் படம்தான் Dude. இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் சுதா கொங்கராவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர்.
இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் வருகிற 17ஆம் தேதி இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முதல் விமர்சனம்
இந்த நிலையில், Dude படம் எப்படி வந்திருக்கிறது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Dude திரைப்படம் சிறப்பாக இருக்கிறது என இன்சைட் ரிப்போர்ட்ஸ் வெளியாகியுள்ளது. மேலும், லவ் டுடே மற்றும் டிராகன் படங்களை தொடர்ந்து Dude, மூன்றாவது வெற்றிப்படமாக அமையவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
You May Like This Video