தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் இவர்தான், அவரது இந்த படம் ரொம்ப பிடிக்கும்... துல்கர் சல்மான் ஓபன் டாக்
துல்கர் சல்மான்
மம்முட்டி, மோகன்லால், ப்ருத்விராஜ், நிவின் பாலி என பலர் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து கலக்கிய நடிகர்கள்.
அவர்களின் லிஸ்டில் சில வருடங்களுக்கு முன்பு இணைந்தவர் தான் துல்கர் சல்மான்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் சமீபத்தில் உடல்நலக் குறைவால் படங்கள் கமிட்டாகாமல் இருந்துள்ளார்.
தற்போது தெலுங்கில் துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
பேவரெட் நடிகர்
இந்த நிலையில் லக்கி பாஸ்கர் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் துல்கர் சல்மான் பேசும்போது, நான் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன்.
இயக்குனர் வெங்கி அட்லுரிக்கும் நடிகர் அஜித்தை இயக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை உள்ளது. எனக்கு அஜித் நடித்ததில் மங்காத்தா படம் மிகவும் பிடிக்கும், அவரை மாதிரி வேறு யாரும் வர முடியாது என கூறியிருக்கிறார்.