செம பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை செய்த லக்கி பாஸ்கர் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளிவந்த தகவல்

Yathrika
in திரைப்படம்Report this article
லக்கி பாஸ்கர்
ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் துல்கர் சல்மான்.
அதிலும் அவர் தெலுங்கில் நடித்த சீதா ராமம் படம் பெரிய அளவில் ரீச் கொடுத்தது. கடந்த அக்டோபர் 31ம் தேதி துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் என்ற படம் வெளியாகி இருந்தது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர், மீனாட்சி சௌத்ரி நடித்த இப்படம் அமரன் படத்திற்கு பிறகு அடுத்தபடியான ஹிட் படமாக அமைந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
தமிழ்நாட்டில் வசூலில் சக்கைப்போடு போடும் இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது வரை பாக்ஸ் ஆபிஸில் படம் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது.
திரையரங்குகளில் மாஸ் ஹிட்டடித்துவரும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
வருகிற நவம்பர் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்கரின் லக்கி பாஸ்கர் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது.