கல்யாணி பிரியதர்ஷன் உண்மையில் லேடி சூப்பர் தான்.. மனம் திறந்த துல்கர்!
துல்கர் சல்மான்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர்.
இவர் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கி, கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள 'லோகா' படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
மனம் திறந்த துல்கர்!
இந்நிலையில், அவர் மேடையில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " தமிழகத்தின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. என் படங்களுக்கு இங்கு ஆதரவு அதிகம் உள்ளது என்பதை நான் நம்புகிறேன். 'லோகா' படத்தில் கல்யாணி நான் நினைத்ததை விட நடிப்பில் அசத்தி விட்டார்.
'பாக்சிங்' உள்ளிட்ட நிறைய பயிற்சிகளை கற்றார். உண்மையிலேயே நிஜத்தில் அவர் ஒரு லேடி சூப்பர் ஹீரோ தான்" என்று தெரிவித்துள்ளார்.