என்னுடன் ஒப்பிடுவது அவரை அவமானப்படுத்தும்! சூப்பர்ஸ்டார் நடிகர் குறித்து பேசிய துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்
தமிழ், மலையாளம் என பல ரசிகர்களை கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பதித்து முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான்.
இவர் செகண்ட் ஷோ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர். அதை தொடர்ந்து தீவ்ரம், பட்டம் போலே, வாயை மூடி பேசவும், ஹே சினமிக்க, ஓகே கண்மணி போன்ற பல திரைப்படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
துல்கர் சல்மானை பாலிவுட் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஷாரூக்கானுடன் ஒப்பிட்டு செய்திகள் பரவி வந்தன.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
ஆரம்பத்தில், இதற்கு அமைதியாக இருந்த துல்கர் சல்மான், கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகிய சீதா ராமம் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கமளித்துள்ளார்.
அதில், அவர் ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகன் என்றும், படத்திலும் சரி, நிஜத்திலும் சரி ஷாருகானுக்கு நிகர் ஷாருக்கான் தான் என்றும் கூறியுள்ளார். மேலும் அவரை என்னுடன் ஒப்பிடுவது அவரை அவமானப்படுத்தும் செயல் என்றும், ஒரே ஒரு ஷாருக்கான் தான் இருக்கமுடியும் அது அவர் மட்டும் தான் என்றும் கூறியுள்ளார்.

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
